காட்டேரி பூங்காவில் திருமண போட்டோ ஷூட்டுக்கான கட்டணம் உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் திருமண போட்டோ ஷூட் 

எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் புகைப்பட கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இயற்கை அழகு நிறைந்த குன்னூர் காட்டேரி பூங்காவில் திருமண போட்டோ ஷூட் அதிகளவில் நடத்தப்படுகிறது. இத்தகைய போட்டோ ஷூட் நடத்துவதற்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது தோட்டக்கலைத்துறையினர், கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள உள்ளூர் புகைப்பட கலைஞர்கள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day