காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் நேரில் மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

அக்டோபர் 2ம் தேதியான இன்று தேசத்தந்தையான மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகாத்மா காந்தியின் புகழைப் போற்றும் வகையில் அமைந்த பஜனைப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

காந்தி ஜெயந்தியையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர்களும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும், துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, டெல்லி முதலமைச்சர் அதிஷி மற்றும் மத்திய அமைச்சர்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.



varient
Night
Day