காருக்குள் சிக்கிய 2 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் தாய்மாமன் திருமணத்திற்கு வந்திருந்த இரண்டு குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவத்தால் திருமண வீடு மட்டுமின்றி கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தாமரகிடி கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாபு. அவரது திருமணம் நேற்று நடைபெற்றது. ராம்பாபுவின் திருமணத்துக்‍கு அவரது இரு சகோதரிகளும் தங்களது குழந்தைகளான தன்மையா , அபிநயஸ்ரீ ஆகியோருடனும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர். இதனிடையே யாரும் கவனிக்காத நேரத்தில் குழந்தைகள் இருவரும் தாய் மாமனின் காருக்குள் ஏறி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கார் கதவு பூட்டிக் கொண்டதால் உள்ளே சிக்கித் தவித்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் இருவரையும் காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடியுள்ளனர்.  இந்த நிலையில் அங்கிருந்தவர்கள் காருக்குள் எட்டி பார்த்தபோது குழந்தைகள் இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரை திறந்து இரு குழந்தைகளையும் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Night
Day