கார்கில் வெற்றி தினம் - பிரதமர் மோடி மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானின் மோசமான நோக்கங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை, ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி போரில் இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த இந்திய வீரா்களுக்கு மரியாதை செலுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 25-ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தையொட்டி, கார்கில் வெற்றி தினவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கார்கில் சென்றார். அப்போது ட்ராஸ் பகுதியில் உள்ள போர் நினைவு நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து போரில் உயிர்நீத்த வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "கடந்த காலங்களில் பாகிஸ்தான் தனது அனைத்து மோசமான முயற்சிகளிலும் தோல்வியடைந்திருப்பதாகவும், பயங்கரவாதத்தின் உதவியுடன் அந்நாடு தன்னைப் பொருத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் மோசமான நோக்கங்கள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும் இந்திய வீரர்கள் முழு பலத்துடன் பயங்கரவாதத்தை நசுக்குவார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.


Night
Day