காற்று மாசுபாட்டால் வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் காற்று மாசுபாட்டால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடும் காற்று மாசு நிலவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டியதால் டெல்லியின் ஆனந்த் விஹார், இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மந்திர் மார்க், பட்பர்கன்ஜ் ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவுவதுடன், புகைமூட்டத்தால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் மிக நீண்ட பாலங்களில் ஒன்றான பழைய யமுனா பாலத்தை முழுமையாக மறைக்கும் அளவிற்கு அதிகளவு புகைமூட்டம் நிலவியது.




Night
Day