காலி பெட்டிகள் - தேசிய தேர்வு முகமை விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் தேசிய முகமை அலுவலகத்தில் கிடந்த காலி பெட்டிகள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. 

டெல்லியில் தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்‍கு வெளியே கிடந்த காலிப்பெட்டிகள் குறித்து மாணவர்கள் சமூக வலை தளங்களில் கேள்விகளை எழுப்பினர். அதில் கேள்வித்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் இருந்ததாக சிலர்  தெ​ரிவித்து இருந்தனர். இது சர்ச்சை மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் இது பற்றி தேசிய தேர்வு முக​மை ட்விட்டரில் விளக்‍கம் அளித்துள்ளது. காலிப்பெட்டிகளுடன் கூடிய வீடியோவை வெளியிட்டு  அந்தப் பெட்டிகளில் எந்த ஆவணங்களும், பொருட்களும் இல்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் கிடந்த காலி பெட்டிகளில் கியூட் வினாத்தாள் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் விளக்கம்​ அளித்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day