காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட பயங்கர பனி சரிவில் சிக்கிய பலர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கந்தர்பால் மாவட்டம் அருகே உள்ள சோனாமார்க் எனும் பகுதியில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-லடாக் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது விழுந்தது. இதில் பனி சரிவுக்கு நடுவே வாகனங்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அதில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக  மீட்கப்பட்டனர். இருப்பினும் பெரும் பனிச்சரிவில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். பெரும் பனி சரிவு காரணமாக ஜம்மு-லடாக் இடையிலான போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

varient
Night
Day