கிருஷ்ண ஜென்ம பூமி - மசூதியை ஆய்வு செய்ய இடைக்கால தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலத்தில் கிருஷ்ண ஜென்ம பூமியை ஒட்டிய மசூதியை, ஆய்வு செய்ய உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தில், மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலின் சில பகுதிகளை இடித்துவிட்டு, ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாகவும், அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது எனவும் இந்து அமைப்புகள் மதுரா நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை மசூதியில் ஆய்வு செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

Night
Day