குஜராத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பருவமழை தீர்விரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வல்சாத், நவ்சாரி சூரத், மால்பூர் உள்ளிட்ட இடங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால், வாபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூர்ணா, கவேரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளை ஒட்டிய கரையோர மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Night
Day