எழுத்தின் அளவு: அ+ அ- அ
குஜராத் மாநிலம் வதோதராவில் தனியார் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் திறந்து வைத்தனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வளாகத்தை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இதனை, பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் கூட்டாக திறந்து வைத்து, போர் விமானத்தின் மாதிரியை பார்வையிட்டனர். இந்த ஆலையில் ராணுவத்திற்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இந்திய ராணுவத்திற்காக 56 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன. மீதமுள்ள 40 விமானங்கள் TASL நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது உள்ளது. இத்திட்டத்திற்கு டாடா, பாரத் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்களிப்பை வழங்கவுள்ளன. TASL வளாகத்தை திறந்து வைத்தபின், லட்சுமி விலாஸ் அரண்மனையை பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் பார்வையிட்டனர்.