எழுத்தின் அளவு: அ+ அ- அ
ரம்ஜான் பண்டிகை அனைவருடைய வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பண்டிகை சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் இரக்க உணர்வை வலுப்படுத்துவதாக கூறியுள்ளார். ரம்ஜான் பண்டிகை இணக்கமான, அமைதியான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது என்றும் அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேற நமக்கு பலத்தைத் தரட்டும் என்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ரமலான் பண்டிகை சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணையின் உணர்வை அதிகரிக்கட்டும் என்றும், இஸ்லாமியர்கள் அனைவரின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.