குடியரசுத்தலைவர் மாளிகையில் அரைக்கம்பத்தில் தேசிய கொடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையடுத்து, டெல்லி ராஷ்டிரபதி பவனில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இதனை தொடர்ந்து இந்திய அரசு இன்று திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து 7 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. மேலும் அவருடைய இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day