குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி இன்று பதிலுரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலுரையாற்றுகிறார். 

நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடைந்ததால் சீனாவிடமே உற்பத்தி தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், மகா கும்பமேளா கூட்டநெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலுரை ஆற்றுகிறார். அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை மறுநாள் மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றவுள்ளார்.

Night
Day