இந்தியா
உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு.கே.எம்.செரியன் காலமானார்...
இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலக புகழ்பெற்ற மருத்து?...
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பதில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடமைப்பாதையில் தேசியக் கொடியை ஏற்றினார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய உடையான மகாத்மா காந்தி ஜாக்கெட் அணிந்து வருகை புரிந்தார். ராஜ்நாத் சிங், அமித்ஷா, அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு குதிரை வண்டியில் வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராணுவ அணிவகுப்பு மையத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, இந்திய இராணுவத்தின் அணிவகுப்புகள், வானில் ஹெலிகாப்டர்கள் மலர்கள் தூவபட்டு தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டது.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்தோனிஷியா அதிபர் பிரபோவோ சுபியான்டோ கலந்து கொண்டார். இதையொட்டி, இந்திய படைகளோடு இந்தோனிஷிய படைகளும் அணிவகுப்பில் பங்கேற்றன.
இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலக புகழ்பெற்ற மருத்து?...
உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு.கே.எம்.செரியன் மறைவுக்கு ?...