குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகி இருக்‍கிறது.

பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு 2014- ஆம் ஆண்டுக்‍கு முன் இந்தியாவுக்‍கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்‍கப்படுவதற்கு முன்பே அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.

Night
Day