குருகிராம் நில மோசடி வழக்கில் ராபர்ட் வதேரா நடந்தே சென்று அமலாக்‍கத்துறை அலுவலத்தில் ஆஜர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடந்து சென்று விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 2018ல் குருகிராமில் உள்ள மூன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் வட்டி இன்றி 65 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ஒரு சம்மன் அனுப்பியது. தற்போது 2வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் வீட்டிலிருந்து ராபர்ட் வதேரா நடந்தே சென்று அமலாக்‍கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்‍கு இன்று ஆஜரானார். முன்னதாக பேசிய ராபர்ட் வதேரா, தான் அரசியலில் ஈடுபட உள்ள சூழலில், தனக்‍கு எதிராக மத்திய அரசு சதித் திட்டம் தீட்டி வருவதாக தெரிவித்தார்.

Night
Day