கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை : அமித்ஷா, ராஜ்நாத் சிங் பொறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

18-வது நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்வு செய்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கவுள்ளனர். இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டணி கட்சி தலைவர்களிடம் அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவிகளை கூட்டணி கட்சிகள் கேட்கும் நிலையில், உள்துறை, பாதுகாப்பு துறை, நிதித்துறை, ரயில்வே, வெளியுறவுத்துறை,  மத்திய மின்னனு மற்றும் தகவல் தொடர்பு துறை உள்ளிட்டவற்றை பாஜக வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Night
Day