கெஜ்ரிவால் ஒரு சிங்கம், அவரை நீண்ட நாட்கள் சிறையில் வைக்க முடியாது - மனைவி சுனிதா ஆவேச பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலை முன்னிட்டு கெஜ்ரிவால் அளித்துள்ள 6 முக்கிய வாக்குறுதிகளை, அவரது மனைவி சுனிதா இன்று வெளியிட்டார். 

டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் பேசிய சுனிதா, அமலாக்கத்துறை காவலில் இருக்கும் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்தார். அதில், நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச மினசாரம், தங்கு தடையற்ற 24 மணி நேரமும் மின் விநியோகம், ஒவ்வொரு கிராமத்திலும் அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவ மையங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருப்பதாக, அவரது மனைவி சுனிதா தெரிவித்துள்ளார். 

Night
Day