கெஜ்ரிவால் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு ஆம் ஆத்மி கட்சி அறிவுரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறை விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகமாட்டார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், அடுத்த விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் எனவும், இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம் என்பதால், மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

Night
Day