கேரளாவில் ஆண்டுதோறும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் ஆண்டுதோறும் புதிதாக 65 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் புற்றுநோயால் அவதிப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 


திருவனந்தபுரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், கேரளாவில் உள்ள ஆயிரத்து 392 அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் கண்டறியும் சோதனை வசதி இருப்பதாக குறிப்பிட்டார். புற்றுநோய் தொடக்‍க நிலையில் இருக்‍கும் போதே கண்டறிந்தால் கட்டுப்படுத்த இயலும் என்று தெரிவித்த அவர், பெரும்பாலான மக்‍கள் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைகளை நாடுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறினார். மக்‍களுக்‍கு புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டு முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

varient
Night
Day