கேரளாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தியவர் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் இருந்து சென்னை செங்குன்றம் பகுதிக்கு கஞ்சா கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து 10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

செங்குன்றம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாகச் சென்ற மினி கனரக வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 10 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. மேலும் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து செங்குன்றத்தில் பொட்டங்களாக மாற்றி விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து 10 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த சந்தீப் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day