கேரளாவில் மூளை தொற்றுநோய் பாதித்து 3 பேர் உயிரிழப்பு !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் பரவி வரும் அரிய வகை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் மூளை தொற்று நோய் பாதித்து 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், நீரில் இருந்து இந்த நோய் தொற்று பரவுவதால் கலங்கலான, மாசு உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் குளிக்க வேண்டாம் எனவும், நீர் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள சுகாதார அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார். மூளை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும் எனவும் பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day