கேரளா: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் ரோபோ ஆசிரியை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் ரோபோ ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏஐ தொழில்நுட்பத்திறனுடன் இயங்கும், 'ஐரிஸ்' என்ற மனித இயல்பு கொண்ட ரோபோவை பள்ளி நிர்வாகம் வடிவமைத்துளது. அச்சு அசலாக ஒரு பெண் உருவில் காட்சியளிக்கும் இந்த ரோபோ, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பேசும் திறமையை கொண்டுள்ளது. பல்வேறு பாடங்களிலிருந்து மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சரளமாக பதிலளிக்கும் இந்த ரோபோ குறித்த வீடியோ, தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. 

Night
Day