கேரள சட்டப்பேரவையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநில சட்டப்பேரவையில் 2024 - 25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ஆயிரத்து 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் முதலமைச்சர் பினராஜி விஜயன் தலைமையில் இடது சாரிகள் ஆட்சி நடத்தி வருகின்றனர். 2024 - 25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்தார். அப்போது, பேசியவர் கேரள மாநிலத்தை யாராலும் உடைக்க முடியாது, மாநில அரசு சோர்ந்தும் போகாது என்றும், தொடர்ந்து மக்களுக்காக இயங்கி கொண்டு இருக்கும் என்றும் தெரிவித்தார். பட்ஜெட்டில், ரப்பருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 180 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், போராடி வரும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வேளாந்துறைக்கு ஆயிரத்து 690 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

varient
Night
Day