கேரள : ஆலப்புழா மாவட்டத்தில் அதிகரித்துள்ள பறவை காய்ச்சல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பண்ணைகளில் வாத்து, கோழிகளை அழிக்கும் பணி தொடங்கியுள்ளன. குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்னைகளில் வாத்துகள் கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடத்திய சோதனையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது  உறுதியானது. இதனை தொடர்ந்து பறவை காய்ச்சலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தொற்று கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது. 

Night
Day