கேல் ரத்னா விருது பெற்றார் உலக செஸ் சாம்பியன் குகேஷ்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கவுரவித்தார். 

விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. அவர்களுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கவுரவித்தார்.

கடந்தாண்டு உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த குகேஷுக்கு கேல் ரத்னா விருதை வழங்கி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கவுரவித்தார்.

இதேபோல், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்மன்ப்ரீத் சிங், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கவுரவித்தார்.

தொடர்ந்து, பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவம், மணிஷா ராமதாஸ் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கவுரவித்தார்.

இதேபோல் மொத்தம் 32 வீரர் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதும், வாழ்நாள் சாதனைக்கான அர்ஜூனா விருது 2 பேருக்கும், துரோணாச்சாரியார் விருது 3 பேருக்கும், வாழ் நாள் சாதனைக்கான துரோணாச்சாரியார் விருது 2 பேருக்கும் வழங்கப்பட்டது.


Night
Day