கை கழுவும் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி புது குப்பம் ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் கை கழுவும் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மூன்று மாணவர்களின் உடல்நலம் குறித்து சபாநாயகர் மற்றும் அமைச்சர் ஆகியோர் கேட்டறிந்தனர். 

தவளகுப்பம் அருகே புது குப்பம் ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, கை கழுவும் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையல் சிகிச்சை பெற்று வரும் அவர்களை சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்தும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர். 

Night
Day