கொல்கத்தாவில் காவல்துறையைக் கண்டித்து நாளை முழு அடைப்பு - பாஜக அழைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாணவர் அமைப்புகள் நடத்திய பேரணியில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து நாளை முழுஅடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க தலைமைச் செயலகத்தை பல்வேறு மாணவர் அமைப்புகள் முற்றுகையிட பேரணியாக சென்றனர்.  போலீசார் தடியடி நடத்தியும் , தண்ணீரை பீய்ச்சி அடித்தும் , கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். இந்நிலையில் மாணவர்களின் பேரணியில் காவல்துறை  நடத்திய தாக்குதலை கண்டித்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர மாநிலம் தழுவிய முழு அடைப்பிற்கு மேற்கு வங்க மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

Night
Day