கொல்கத்தாவில் நாட்டின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீருக்கு அடியில் செல்லும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஹவுரா எஸ்பிளனேடு இடையேயான 16 கிலோ மீட்டர் வரையான மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. திட்டம் முழுமையடைந்த நிலையில், இன்று ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் ரயில் பாதை என்பதும், ஹூக்ளி ஆற்றின் கீழ், சுமார் 16 மீட்டருக்கு அடியில் அமைக்கப்பட்ட ரயில் பாதை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில், தினசரி 7 லட்சம் பேர் பயணிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 15 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கான திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.  

Night
Day