கோடை வெயிலுக்கிடையே கேரளாவில் பரவலாக வெளுத்து வாங்கும் கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கன்னியாகுமரி கடற்பகுதியில் நிலவும் சூறாவளி சுழற்சியால் கேரளாவின் தெற்கு மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது. இதனிடையே இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் கடலோர பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Night
Day