கோயிலுக்கு சென்ற பக்தர்களை யானைகள் தாக்கியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் சிவராத்திரியை முன்னிட்டு வனப்பகுதி வழியாக கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்களை, காட்டு யானைகள் தாக்கியதில் 3 பேர் சம்பவ இடத்திலயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டம், குண்டலகோனாவில் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வனப்பகுதி வழியாக சிவன் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடமாடி கொண்டிருந்த காட்டு யானை கும்பல் ஒன்று திடீரென பக்தர்களை தூக்கி பந்தாடியுள்ளது. எதிர்பாராத இந்த தாக்குதலில் தினேஷ்,  மன்னம்மா மற்றும் செங்கல் ராயுடு ஆகிய மூன்று பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர், மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இதனிடையே அந்த வழியாக சென்ற பக்தர்கள் அளித்த தகவலை அடுத்து, வனத்துறை மற்றும் காவல் துறையினர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டதுடன், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day