கோவா : "முழு பலன்கள் மக்களுக்கு சென்றடைவதே மதச்சார்பின்மை" - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களுக்கு முழு பலன்கள் சென்றடைவதே உண்மையான மதச்சார்பின்மை என்று 
கோவாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கோவா சென்ற பிரதமர் மோடி, அங்கு ஓஎன்ஜிசி கடல் வாழ் உயிரின மையத்தை திறந்து வைத்து, பெதுலில் நடந்த 2ம் ஆண்டு இந்திய எரிசக்தி வார விழாவில் பங்கேற்றார். இத்துறை சார்ந்த பல்வேறு நிறுவன சிஇஓ மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அங்கு, பேசியபோது நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதத்தை தாண்டி உள்ளது என்றும்  குறிப்பிட்டார். எனவே உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும் என உலகம் முழுவதும் உள்ள பொருளாதார நிபுணர்கள் நம்புவதாக தெரிவித்தார். 2045ம் ஆண்டுக்குள் நாட்டின் எரிசக்தி தேவை இரட்டிப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

Night
Day