கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுகிறது ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என அதனை தயாரித்த ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில், உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளை திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டது. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி 150 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலர் உயிரிழந்ததாகவும், சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதனை உறுதிசெய்த ஆஸ்டிராஜெனிகா நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்த உறைவு, ரத்த தட்டணுக்கள் குறைவு போன்ற பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று ஒப்புக்கொண்டது. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்படும் நபர்களுடன் தங்கள் நிறுவனம் துணை இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தது. 

இந்த நிலையில், உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுவதாக ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் ஏற்றுமதி குறைந்துள்ளதால் உபரியாக உள்ள தடுப்பூசிகளை திரும்பப்பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Night
Day