சக்திவாய்ந்த நிலநடுக்கம்... உருக்குலைந்த மியான்மர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழப்பு ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மியான்மரில் நேற்று நண்பகல் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 புள்ளி 7 மற்றும் 6 புள்ளி 4 ஆக பதிவானது.  

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர். நிலநடுக்கத்தால் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 700க்கும் மேற்பட்டோர் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கம் காரணமாக மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்


இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், முதற்கட்டமாக 15 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. தற்காலிக கூடாரம், போர்வை, உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, ஜெனரேட்டர், அடிப்படை மருந்துகள் உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் ராணுவ விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Night
Day