சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியர் - விடுமுறை மறுக்கப்பட்டதால் ஆத்திரத்தில் வெறிச்செயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்கத்தில் விடுமுறை மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர் ஒருவர் தனது சக ஊழியர்கள் நான்கு பேரை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கொல்கத்தாவில் உள்ள தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் அமித் சர்க்கார் என்ற அந்த ஊழியர், சக ஊழியர்களை குத்திவிட்டு ரத்தக்கறை படிந்த கத்தியுடன் சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். தடுக்க முனைந்த சிலரையும் அருகில் வர வேண்டாம் என மிரட்டிய அவரை, போலீசார் கைது செய்தனர். இதனிடையே, கத்திக்குத்துப்பட்ட நால்வரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறியுள்ள போலீசார், அமித் குமார் சர்க்காருக்கு மனநல பிரச்சினைகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Night
Day