எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சட்ட மேதை அம்பேத்கரின் 135வது பிறந்த நாளையொட்டி அவரது திரு உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சட்ட மேதை அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மலர் மாலைகளால் சட்ட மேதை அம்பேத்கரின் உருவச் சிலை மற்றும் புகைப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது திரு உருவப் படத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அம்பேத்கரின் திரு உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அமைச்சர்கள், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் அம்பேத்கரின் திரு உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.