எழுத்தின் அளவு: அ+ அ- அ
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தாண்டேவாடா , நாராயண்பூர் மற்றும் பீஜப்பூர் ஆகிய பகுதிகளில் நக்சல்களை தேடும் பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தேடுதல் வேட்டைக்கு பின்னர் பீஜப்பூரில் பாதுகாப்பு வாகனத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் திரும்பி வந்தனர். அம்பேலி பகுதியில் குத்ரு - பெந்தே சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் 15 பேர் வந்தபோது நக்சலைட்கள் சாலையில் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு வாகனம் பல அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு வெடித்துச் சிதறியது. இதனால் வாகனத்தில் பயணம் செய்த 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் உள்பட 9 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.