சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் பலி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையிலான துப்பாக்கி சண்டையில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை ஒழிக்கும் பணியில் பாதுகாப்புப்படை தீவிரம் காட்டி வருகிறது. சுக்மா மாவட்டம் கெர்லாபால் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி, நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி கொடுத்ததில், 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்தனர். நக்சலைட்டுகளிடம் இருந்து உயர் ரக துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள், வெடி மருத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 20ம் தேதி பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் பாதுகாப்புப்படை - நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Night
Day