சபரிமலையில் பக்‍தர்கள் தரிசிக்‍க புதிய கட்டுப்பாடு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வருகிற டிசம்பர் 25,26 மற்றும் ஜனவரி 12, 14ம் தேதிகளில் தலா 50 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் 80 ஆயிரம் பேர் தரிசிக்‍க அனுமதி அளிக்கப்படும். இந்தாண்டு மண்டல, மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் பக்‍தர்கள் தரிசிக்‍க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், சபரிமலையில் டிசம்பர் 25, 26-மற்றும் ஜனவரி 12, 14 ஆகிய தேதிகளில் தலா 50 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி என்றும், மேற்கண்ட நாட்களில் ஸ்பாட் புக்கிங் வசதி இல்லை என்றும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Night
Day