எழுத்தின் அளவு: அ+ அ- அ
செக் குடியரசு நாட்டின் பிரெரோவ் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தில் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது.
பிரெரோவ் பகுதியில் உள்ள ஹுஸ்டோபீஸ் நாட் பெச்வோவில், பென்சோல் என்ற எளிதில் தீப்பற்றக் கூடிய நச்சு திரவத்துடன் சரக்கு ரயில் கொண்டிருந்தது. திடீரென அந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தடம்புரண்ட ரயிலில் இருந்த வேகன்கள் கவிழ்ந்து, அதிலிருந்த பென்சோல் கசிந்து எரியத் தொடங்கியது. மளமளவென தீ பரவியதால் ஏற்பட்ட தீப்பிளம்புகளும், கரும்புகையும் பல அடி உயரத்திற்கு எழும்பின. பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கும் அளவிற்கு கரும்புகை விண்ணை நோக்கி கிளம்பியது. பென்சோல் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வேகன்கள் எரிந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தை போலீசார் சீல் வைத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட தகவல்களின்படி, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பென்சோல் கசிவால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.