சரத் பவார் அணி தேசியவாத காங். எம்.பி. பதவியை ராஜினாமா செய்த பிரபுல் படேல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சரத்பவார் அணி முன்பு பெற்ற தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பதவியை பிரபுல் படேல் நேற்று ராஜினாமா செய்தார். தனது பதவி விலகல் கடிதத்தை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கரிடம் அளித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபுல் படேல் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவை எம்.பி.யாக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள் 
துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இணைந்தனர். அஜித் பவாருடன் பிரபுல் படேல் இணைந்து செயல்பட்டதால், சரத் பவார் தலைமையில் வெற்றி பெற்ற மாநிலங்களவை எம்.பி. பதவியை பிரபுல் படேல் ராஜினாமா செய்தார். அவர் புதிதாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்‍கப்பட்டுள்ளதால் பிரபுல் படேல் இன்னும் 4 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள  தனது முந்தைய பதவியை ராஜினாமா செய்தார்.

Night
Day