சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜெய்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மேடைக்கு அழைக்கப்படாதது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. 

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மகுடம் சூடியது. பரிசளிப்பு நிகழ்வில் ஐசிசி தலைவர் ஜெய்ஷாவிடம் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கோப்பையை பெற்றுக்கொண்ட நிலையில், அந்நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மேடைக்கு அழைக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகாரளித்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ஐசிசி, மேடையில் எப்போதும் ஐசிசி தலைவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், அதன்படியே அன்றைய நிகழ்வில் நடந்ததாகவும் பாகிஸ்தானுக்கு பதிலளித்துள்ளது.

Night
Day