சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்படும் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்த நாள் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 


வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று பேசிய அவர், வல்லபாய் படேல் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் 31ம் தேதியும், பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் அடுத்த மாதம் 15ம் தேதியும் துவங்குவதாக கூறினார். இந்த இரண்டு மிகச் சிறந்த மனிதர்களுக்கான சவால்கள் வெவ்வேறாக இருந்தாலும், நாட்டின் ஒற்றுமை என்பதே இருவருடையே பார்வையாக  இருந்ததாக அவர் தெரிவித்தார். இருவருடைய 150வது பிறந்த நாள் விழாவையும் தேசிய அளவில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

varient
Night
Day