சர்வர் செயலிழப்பு - 3 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய யுபிஐ பரிவர்த்தனை

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் திடீரென யுபிஐ சேவைகள் சுமார் 3 மணி நேரமாக முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை தான் பயன்பாடு தான் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா கூட ரொக்கமாக எடுத்து செல்லாமல், பெட்டி கடை முதல் வணிக வளாகம் வரை நினைத்ததை தற்போது யுபிஐ செயலி மூலமாக வாங்க முடியும் நிலை உள்ளது. இவ்வாறு அனைவரும் செயல்படுத்தும் ஜி பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட அனைத்து செயலிகளும் கடந்த 3 மணி நேரமாக முடங்கியுள்ளது. சர்வர் செயலிழப்பு காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளதால் பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். யுபிஐ பரிவர்த்தனைகளை நம்பி பணம் எடுத்துசெல்லாமல் இருப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சர்வர் செயலிழப்பு காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போன் பே, ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் வேலை செய்யவில்லை பயனர்கள் புகார் அளித்துள்ளனர். சர்வர் செயலிழப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்பதே பயனர்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day