சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 25 வாக்குறுதிகள் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு...

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

பணியில் இருக்கும் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு.

ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகைக்கான நிதி இரட்டிப்பாக்கப்படும்.

எஸ்.சி., எஸ்.டி. ஓ.பி.சி.க்கான இடஒதுக்கீட்டில் 50% வரம்பை உயர்த்தும் அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படும்.

மார்ச் 2024 வரை பெறப்படும் அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் -

எஸ்.சி., எஸ்.டி. ஓ.பி.சி.க்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் உள்ள காலியிடங்களை ஒரு வருடத்தில் நிரப்புவோம்.

எந்தத் தொகையும் இல்லாமல் அரசுப் பள்ளியில் இலவச கல்வி வழங்கப்படும்

வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்

தேசிய அளவில் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும்.

நீட், க்யூட் தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கேற்ப நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மூத்த குடிமக்கள், விதவைகள், ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் சிறப்பு தொகையாக வசூலிக்கப்படும் திட்டம் ரத்து செய்யப்படும்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டண வசூலிப்பை தடுக்க கட்டண கொள்கை குழு அனைத்து மாநிலத்திலும் அமைக்கப்படும்.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி நிறுவப்படும்.

நாடு முழுவதும் உள்ள பெண்கள் விடுதிகள் இரட்டிப்பாக்கப்படும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பில் மீனவ மக்களும் கணக்கெடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.

நாடு முழுவதும் கடற்கரையோரங்களில் மீனவர்களுக்காக மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படும்.

ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும்.

ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி செய்யும் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 400ஆக உயர்த்தப்படும்.









Night
Day