சாலையோர ஆக்கிரமிப்புகள் முன்னறிவிப்பின்றி அகற்றம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி நகரப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை முன்னறிவிப்பின்றி நகராட்சியினர் அகற்றியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 


புதுச்சேரி நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுவதால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முன்னறிவிப்பின்றி ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டதாக கூறி பாரதி வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day