சிக்கிம் : புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வங்கியில் "ரூ.10,800 வைப்புத் தொகை" புதிய திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிக்கிம் மாநிலத்தில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு, வங்கியில் 10 ஆயிரத்து 800 ரூபாய் நிரந்தர வைப்புத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படுவதாக முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையோ 6 லட்சத்து 10 ஆயிரமாக உள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளதே இதற்கு காரணமாகும். இதையடுத்து குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், பெண் அரசு ஊழியர்கள் 2-வது குழந்தை பெற்றால் சிறப்பு ஊதிய உயர்வு, 3-வது குழந்தை பெற்றுக்கொண்டால் இரட்டை ஊதிய உயர்வு, ஓராண்டு பேறுகால விடுமுறை, புதிதாக தந்தையாகுவோருககு ஒரு மாத விடுப்பு என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அந்த வரிசையில் தற்போது புதிதாக பிறக்கும் குழந்தைகளின் பெயரில் 10 ஆயிரத்து 800 ரூபாய் வைப்புத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day