சிபிஐ வழக்கிலிருந்து தப்பிக்க பாஜகவில் இணைகிறார் கைலாஷ் கெலாட் - ஆம் ஆத்மி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள கைலாஷ் கெலாட் தன் மீது அமலாக்‍கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த பல்வேறு வழக்‍குகளில் இருந்து தப்புவதற்காக வேறு வழியின்றி பாஜகவில் இணைய உள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து டெல்லியில் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளரான பிரியங்கா கக்‍கர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆம் ஆத்மி கட்சிக்‍காக 15 மணி நேரத்துக்‍கு முன்பு கூட பணியாற்றி வந்த அமைச்சர் கைலாஷ் கெலாட், சி​றை செல்ல பயந்து பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சதி வேலைகளை பாஜக தொடங்கி உள்ளதாகவும், அமலாக்‍கத்துறை, சிபிஐ அதிகாரிகளை முடுக்‍கி விட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

varient
Night
Day