சிவன் சன்னதி கருவறையில் மாமிசம் கிடந்த விவகாரம் - நாயும், பூனையும் தான் காரணம் என போலீசார் விசாரணையில் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சிவன் சன்னதி கருவறையில் கிடந்த மாமிசம் தொடர்பான விவகாரம் மத பிரச்சனையாக மாறிய நிலையில் இதற்கு நாயும், பூனையும் தான் காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பசபுத்ரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கட விமோசன அனுமன் கோவிலின் சிவன் சன்னதி கருவறையில் மாமிசம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அர்ச்சகர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க, அதற்குள் இது மத ரீதியான பிரச்னையாக உருவாக தொடங்கியது. உள்ளூர் சமூகத்தினர் கருவறைக்குள் மாமிசம் கிடந்தது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்பகுதி கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் இறைச்சி துண்டை நாய் ஒன்று எடுத்து வருவதும், பின்னர் அதனை பூனை ஒன்று கவ்வி செல்வதும் இடம் பெற்றுள்ளது. எனவே, மக்கள் நடமாட்டம் இருந்ததால் பூனை மாமிசத்தை கோவிலுக்குள் கொண்டு சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. போலீசாரின் விசாரணைக்கு பிறகு போராட்டம் நடத்திய உள்ளூர் மக்கள் சமாதானம் அடைந்துள்ளனர். உரிய நேரத்தில் காவல்துறை எடுத்த முயற்சியால் இவ்விவகாரம் மத ரீதியான பிரச்சனையாக உருவாகாமல் தடுக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Night
Day