சி.எஸ்.கே. முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக வருங்கால வைப்பு நிதி ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த தனியார் ஆடை நிறுவனத்தின் இயக்குநராக உள்ள ராபின் உத்தப்பா, அந்நிறுவனத்தின் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 24 லட்சம் ரூபாயை, தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரைத்தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 27-ம் தேதிக்குள் பணம் செலுத்தாத பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. 

Night
Day